நேநசக்கரம் இணையத்தில் சென்று பாருங்கள்

Friday, September 24, 2010

www.nesakkaram.org என்ற முகவரியில் நேசக்கரம் செய்து வருகின்ற தாயக உறவுகளுக்கான உதவிகள் அறிக்கைகள் படங்கள் யாவையும் பதிவிட்டுள்ளோம். உறவுகள் எமது இணையம் ஊடாக எமது விபரங்கள் மற்றும் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டு எமது உறவுகளுக்கு உதவலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

திட்டம் 11

Wednesday, January 6, 2010
திட்டம் 11 இலிருந்து இலங்கைரூபா பதினைந்தாயிரம் ரூபா(15000ரூபா) வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் வாழும் ஒருவருக்கு வழங்கப்பட்டது. இந்நிதியை அன்பளிப்புச் செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அன்பர் திரு.ஜீவா. மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு முகாமில் வாழும் ஒருவருக்கு லண்டனிலிருந்து திருமதி.லோகா அவர்களது பங்களிப்பிலிருந்து பத்தாயிரம் ரூபா(10000ரூபா) வழங்கப்பட்டது.

திரு.ஜீவா மற்றும் திருமதி லோகா அவர்களுக்கு நேசக்கரம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பங்களிப்பானது பங்களித்த இருவரும் உரியவர்களுக்கு நேரடியாக கிடைக்கும்படி அனுப்பியிருந்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கு உதவுங்கள்

Friday, January 1, 2010

வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.

இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது.

இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூரோ அல்லது பத்துஅமெரிக்க அவுஸ்ரேலிய டொலர் உதவி கோருகிறோம்.

ஆளுக்கொரு பிள்ளையைப் பொறுப்பேற்பதன் மூலம் எமது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் நாம் உதவலாம்.

உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அல்லது இங்கே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது 3மாதங்களுக்கு ஒருமுறை பணத்தை அனுப்பலாம்.

எங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான உங்கள் உதவிக்கரங்களை வரவேற்கிறோம்.

மேற்படி பாடசாலை அதிபர் திரு.கண்ணதாசன் அவர்களிடமிருந்து பெறப்பட்டபிள்ளைகளின் விபரங்கள் கீழே இணைக்கிறோம்.

திட்டம் 8 படங்களுடன்


திட்டம் - 8


பங்களிப்பு தொகை : 39125,00 இலங்கை ரூபாய் அனுப்பப்பட்டது.

செயற்திட்டம் : இப்பங்களிப்பிலிருந்து வவுனியா சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் மகப்பேற்றுப்பிரிவில் குழந்தைபெற்ற தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களும் மற்றும் உடைகள், காயமடைந்து மருத்துவம் பெற்றுவரும் சிலருக்கான சாரம் ஆண்கள் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியனவும் முகாமிலிருந்து வெளியில் வந்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சுயதொழில் (கோழிவளர்ப்பு) செய்வதற்கான கோழிகள் ஐயாயிரம் ரூபாவுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்துள்ளது. (பயன்பெற்றவர்கள் யாவரும் மேமாதம் இராணுவத்தினரால் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் சிலர் தற்போது முகாமுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள்.

திட்டத்தை செயற்படுத்தியவர் - சாந்தி

நேசக்கரம் திட்டம் 10

Wednesday, October 14, 2009





நேசக்கரம் திட்டம் பத்திலிருந்து வவுனியா கோவில்குளம் *சிறீ அகிலாண்டேஸ்வரி அருளகம்* இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்காக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா(180000ரூபா) பெறுமதியான பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தில் 133பெண் பிள்ளைகளும் 58ஆண் பிள்ளைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பிள்ளைகளுக்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்டமைக்கான கடிதத்தை மேற்படி இல்லத்தின் கெளரவ செயலாளர் திரு.நவரத்தினராசா அவர்கள் அனுப்பிய நன்றிக் டிதம் கீழே இணைக்கிறோம்.

வழங்கப்பட்ட பொருட்களுக்கான சிட்டையும் மேலதிக விபரங்களும் பங்களிப்பு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படங்களும் இணைக்கப்படுகிறது.

திட்டம் 10 செயற்படுத்தியவர் சாந்தி.








நேசக்கரம் இதுவரை செய்தவை

Monday, September 28, 2009

நேசக்கரம் நண்பர்கள் வட்டம் இதுவரை தாயக மக்களுக்காக செய்தவை.

திட்டம் - 1

செயற்திட்டம்:மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களது துணைவியாருக்கு ஒருலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு.வித்தியாதரன் அவர்களால் இந்நிதி வழங்கப்பட்டது.
பங்களிப்பு தொகை (இலங்கை ரூபாயில்): ரூ 100,000.00



திட்டத்தை செயற்படுத்தியவர்: சாத்திரி


புகைப்பட விபரம்;







திட்டம் - 2

செயற்திட்டம்:போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் கிளிநொச்சியில் அமைந்திருக்கும் தமிழீழபெண்கள் அமைப்பிற்கான நிதி உதவி.

பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 385,000.00 [மூன்று லட்சத்து எண்பத்தி ஐயாயிரம் ரூபா]

திட்டத்தை செயற்படுத்தியவர்: சாத்திரி.

புகைப்பட விபரம்.






திட்டம் 3


செயற்திட்டம்:தமிழீழம் வவுனியா செட்டிக்குளம் செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்தோர், விதவைகள் மற்றும் உதவி ஏதுமற்ற அனாதைக் குடும்பங்களை சேர்ந்த 28 வறியகுடும்பங்களுக்கான நிதி உதவி.

பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 233,724.00[இரண்டு லட்சத்து முப்பத்தி மூவாயிரத்து எழுநூற்று இரபத்தி நான்கு ரூபா]

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி கமலாதேவி ஊடாக 28குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.

திட்டத்தை செயற்படுத்தியவர்: சாந்தி.

புகைப்பட விபரம்.








திட்டம் 4

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு 1500யூரோக்கள் கொடுக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் திரு.பரமேஸ்வரன் அவர்களால் தரப்பட்டது.

திட்டத்தைநிறைவேற்றியவர்..சாந்தி

நேசக்கரம் 4இலிலிருந்து அனுப்பப்பட்ட 1500யூரோவுக்கான ஆதாரக்கடிதம் கீழ் இணைக்கிறேன்.



திட்டம் - 5

பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் யேர்மன் கிளையினருக்கு 650€ அனுப்பப்பட்டது. 26.11.2008 அன்று பெற்றுக்கொண்ட 650யூரோக்களுக்கான கடிதம் யேர்மன் கிளையின் சார்பாக திருமதி சாரதா மனோகரன் அவர்களால் வழங்கப்படது.
நிறைவேற்றியவர்..சாந்தி

திட்டம் 5இற்கான பணம் அனுப்பப்பட்டமைக்கான ஆதாரக்கடிதம்.
பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் யேர்மன் கிளையினர் 26.11.2008 அன்று பெற்றுக்கொண்ட 650யூரோக்களுக்கான யேர்மன் கிளையினரால் தபால் ஊடாக தரப்பட்ட கடிதத்தை இங்கு இணைக்கிறேன்.



திட்டம் - 6 கட்டம் - 1 , 2

திட்டம்6 இன் கட்டம் 1 : இங்கிலாந்த் பங்களிப்பான £350.00 டண் அவர்கள் ஊடாக TRO.UK கையளிக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் டண் அவர்களுக்கு புனர்வாழ்வுக்கழகத்தினரால் டண் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கட்டம் - 2வணங்காமண்ணுக்கு வழங்கப்பட்டது. லண்டன் பங்காளர்களின் பங்களிப்பு £800.00 டண் அவர்களால் வழங்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் டண்ணிடம் வழங்கப்பட்டிருந்தது.





















படம் 2[TRO கடிதம்]


திட்டம் - 7

225€
யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் கொடுக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் சோ.ஈஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.



யேர்மனி புனர்வாழ்வுக்கழகத்திடம் கொடுக்கப்பட்ட 225யூரோக்களுக்கான கிடைக்கப்பெற்ற கடிதம் மேலே போட்டுள்ளேன்.



திட்டம் - 8


பங்களிப்பு தொகை : 39125,00 இலங்கை ரூபாய் அனுப்பப்பட்டது.

செயற்திட்டம் : இப்பங்களிப்பிலிருந்து வவுனியா சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் மகப்பேற்றுப்பிரிவில் குழந்தைபெற்ற தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களும் மற்றும் உடைகள், காயமடைந்து மருத்துவம் பெற்றுவரும் சிலருக்கான சாரம் ஆண்கள் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியனவும் முகாமிலிருந்து வெளியில் வந்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சுயதொழில் (கோழிவளர்ப்பு) செய்வதற்கான கோழிகள் ஐயாயிரம் ரூபாவுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்துள்ளது. (பயன்பெற்றவர்கள் யாவரும் மேமாதம் இராணுவத்தினரால் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் சிலர் தற்போது முகாமுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள்.

திட்டத்தை செயற்படுத்தியவர் - சாந்தி

திட்டம் - 9
செயற்திட்டம்:வவுனியா அருளகம் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள்களுக்கான பாடசாலைச் சீரூடைகளுக்காக வழங்கப்பட்டது.

பங்களிப்பு தொகை: இலங்கை ரூபாயில் - 24768,50 (180மீற்றர் பள்ளிச்சீருடைகளுக்கான துணிவாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது)

திட்டத்தை செயற்படுத்தியவர் - சாந்தி

திட்டம் 10

விரைவில் விபரங்கள் அறியத்தரப்படும்.