

இந்த இல்லத்தி

வழங்கப்பட்ட பொருட்களுக்கான சிட்டையும் மேலதிக விப

திட்டம் 10 செயற்




அவலமுறும் எங்கள் தாயக உறவுகளுக்காய் புலத்திலிருந்து நேசக்கரம் கொடுப்போம்
நேசக்கரம் நண்பர்கள் வட்டம் இதுவரை தாயக மக்களுக்காக செய்தவை.
திட்டம் - 1
செயற்திட்டம்:மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களது துணைவியாருக்கு ஒருலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு.வித்தியாதரன் அவர்களால் இந்நிதி வழங்கப்பட்டது.
பங்களிப்பு தொகை (இலங்கை ரூபாயில்): ரூ 100,000.00
திட்டம் - 2
செயற்திட்டம்:போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் கிளிநொச்சியில் அமைந்திருக்கும் தமிழீழபெண்கள் அமைப்பிற்கான நிதி உதவி.
பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 385,000.00 [மூன்று லட்சத்து எண்பத்தி ஐயாயிரம் ரூபா]
திட்டம் 3
செயற்திட்டம்:தமிழீழம் வவுனியா செட்டிக்குளம் செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்தோர், விதவைகள் மற்றும் உதவி ஏதுமற்ற அனாதைக் குடும்பங்களை சேர்ந்த 28 வறியகுடும்பங்களுக்கான நிதி உதவி.
பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 233,724.00[இரண்டு லட்சத்து முப்பத்தி மூவாயிரத்து எழுநூற்று இரபத்தி நான்கு ரூபா]
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி கமலாதேவி ஊடாக 28குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.
திட்டம் 4
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு 1500யூரோக்கள் கொடுக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் திரு.பரமேஸ்வரன் அவர்களால் தரப்பட்டது.
திட்டத்தைநிறைவேற்றியவர்..சாந்தி
நேசக்கரம் 4இலிலிருந்து அனுப்பப்பட்ட 1500யூரோவுக்கான ஆதாரக்கடிதம் கீழ் இணைக்கிறேன்.
திட்டம் - 5
பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் யேர்மன் கிளையினருக்கு 650€ அனுப்பப்பட்டது. 26.11.2008 அன்று பெற்றுக்கொண்ட 650யூரோக்களுக்கான கடிதம் யேர்மன் கிளையின் சார்பாக திருமதி சாரதா மனோகரன் அவர்களால் வழங்கப்படது.
நிறைவேற்றியவர்..சாந்தி
திட்டம் - 6 கட்டம் - 1 , 2
திட்டம்6 இன் கட்டம் 1 : இங்கிலாந்த் பங்களிப்பான £350.00 டண் அவர்கள் ஊடாக TRO.UK கையளிக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் டண் அவர்களுக்கு புனர்வாழ்வுக்கழகத்தினரால் டண் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கட்டம் - 2வணங்காமண்ணுக்கு வழங்கப்பட்டது. லண்டன் பங்காளர்களின் பங்களிப்பு £800.00 டண் அவர்களால் வழங்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் டண்ணிடம் வழங்கப்பட்டிருந்தது.
திட்டம் - 7
225€ யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் கொடுக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுக்கடிதம் சோ.ஈஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.
திட்டம் - 8
பங்களிப்பு தொகை : 39125,00 இலங்கை ரூபாய் அனுப்பப்பட்டது.
செயற்திட்டம் : இப்பங்களிப்பிலிருந்து வவுனியா சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் மகப்பேற்றுப்பிரிவில் குழந்தைபெற்ற தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களும் மற்றும் உடைகள், காயமடைந்து மருத்துவம் பெற்றுவரும் சிலருக்கான சாரம் ஆண்கள் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியனவும் முகாமிலிருந்து வெளியில் வந்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சுயதொழில் (கோழிவளர்ப்பு) செய்வதற்கான கோழிகள் ஐயாயிரம் ரூபாவுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்துள்ளது. (பயன்பெற்றவர்கள் யாவரும் மேமாதம் இராணுவத்தினரால் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் சிலர் தற்போது முகாமுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள்.
திட்டத்தை செயற்படுத்தியவர் - சாந்தி
திட்டம் - 9
செயற்திட்டம்:வவுனியா அருளகம் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள்களுக்கான பாடசாலைச் சீரூடைகளுக்காக வழங்கப்பட்டது.
பங்களிப்பு தொகை: இலங்கை ரூபாயில் - 24768,50 (180மீற்றர் பள்ளிச்சீருடைகளுக்கான துணிவாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது)
Copyright © 2008 நேசக்கரம் | Design by Arcsin Web Templates - Blogger template by Blog and Web