நேநசக்கரம் இணையத்தில் சென்று பாருங்கள்

Friday, September 24, 2010

www.nesakkaram.org என்ற முகவரியில் நேசக்கரம் செய்து வருகின்ற தாயக உறவுகளுக்கான உதவிகள் அறிக்கைகள் படங்கள் யாவையும் பதிவிட்டுள்ளோம். உறவுகள் எமது இணையம் ஊடாக எமது விபரங்கள் மற்றும் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டு எமது உறவுகளுக்கு உதவலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

திட்டம் 11

Wednesday, January 6, 2010
திட்டம் 11 இலிருந்து இலங்கைரூபா பதினைந்தாயிரம் ரூபா(15000ரூபா) வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் வாழும் ஒருவருக்கு வழங்கப்பட்டது. இந்நிதியை அன்பளிப்புச் செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அன்பர் திரு.ஜீவா. மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு முகாமில் வாழும் ஒருவருக்கு லண்டனிலிருந்து திருமதி.லோகா அவர்களது பங்களிப்பிலிருந்து பத்தாயிரம் ரூபா(10000ரூபா) வழங்கப்பட்டது.

திரு.ஜீவா மற்றும் திருமதி லோகா அவர்களுக்கு நேசக்கரம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பங்களிப்பானது பங்களித்த இருவரும் உரியவர்களுக்கு நேரடியாக கிடைக்கும்படி அனுப்பியிருந்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கு உதவுங்கள்

Friday, January 1, 2010

வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.

இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது.

இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூரோ அல்லது பத்துஅமெரிக்க அவுஸ்ரேலிய டொலர் உதவி கோருகிறோம்.

ஆளுக்கொரு பிள்ளையைப் பொறுப்பேற்பதன் மூலம் எமது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் நாம் உதவலாம்.

உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அல்லது இங்கே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது 3மாதங்களுக்கு ஒருமுறை பணத்தை அனுப்பலாம்.

எங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான உங்கள் உதவிக்கரங்களை வரவேற்கிறோம்.

மேற்படி பாடசாலை அதிபர் திரு.கண்ணதாசன் அவர்களிடமிருந்து பெறப்பட்டபிள்ளைகளின் விபரங்கள் கீழே இணைக்கிறோம்.

திட்டம் 8 படங்களுடன்


திட்டம் - 8


பங்களிப்பு தொகை : 39125,00 இலங்கை ரூபாய் அனுப்பப்பட்டது.

செயற்திட்டம் : இப்பங்களிப்பிலிருந்து வவுனியா சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் மகப்பேற்றுப்பிரிவில் குழந்தைபெற்ற தாய்மாருக்கான சத்துணவுப் பொருட்களும் மற்றும் உடைகள், காயமடைந்து மருத்துவம் பெற்றுவரும் சிலருக்கான சாரம் ஆண்கள் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியனவும் முகாமிலிருந்து வெளியில் வந்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சுயதொழில் (கோழிவளர்ப்பு) செய்வதற்கான கோழிகள் ஐயாயிரம் ரூபாவுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்துள்ளது. (பயன்பெற்றவர்கள் யாவரும் மேமாதம் இராணுவத்தினரால் வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் சிலர் தற்போது முகாமுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள்.

திட்டத்தை செயற்படுத்தியவர் - சாந்தி