போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கு உதவுங்கள்

Friday, January 1, 2010

வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.

இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது.

இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூரோ அல்லது பத்துஅமெரிக்க அவுஸ்ரேலிய டொலர் உதவி கோருகிறோம்.

ஆளுக்கொரு பிள்ளையைப் பொறுப்பேற்பதன் மூலம் எமது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் நாம் உதவலாம்.

உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அல்லது இங்கே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது 3மாதங்களுக்கு ஒருமுறை பணத்தை அனுப்பலாம்.

எங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான உங்கள் உதவிக்கரங்களை வரவேற்கிறோம்.

மேற்படி பாடசாலை அதிபர் திரு.கண்ணதாசன் அவர்களிடமிருந்து பெறப்பட்டபிள்ளைகளின் விபரங்கள் கீழே இணைக்கிறோம்.

1 comments:

S. Balachandran said...

From: eelanadu@hotmail.com


Date: Mon, 25 Jan 2010 10:28:46 +0100

அன்புடையீர்!
தங்களது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 16 வன்னிச் சிறார்னளையும் இங்குள்ள 16 மாணவர்கள் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறார்கள். அவர்களுடன் கருத்தாடல்களை மேற்கொண்டு, எதிர்கால நம்பிக்கைகளை உருவாக்குவதும், தம்மால் முடிந்தவரை உதவிகள் புரிந்து அவர்களை உங்கள் பாதுகாப்பில் வளர்த்தெடுக்கவும், அவர்களது எதிர்கால வளமான எதிர்காலத்திற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள விரும்புகின்றார்கள்.
தங்களுக்கு இதில் பூரண சம்மதமாயின் eelanadu@hotmail.com என்ற முகவரிக்கு e-mail செய்யவும்.
இந்த 16 மாணவர்களையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் பொறுப்பை பாரிசிலிருந்து வெளியானும் ஈழநாடு பத்திரிகை மேற்கொள்ளும் என்பதை அதன் ஆசிரியராகிய நான் தங்களுக்கு உறுதியுடன்தெரிவிக்கின்றேன்.
அன்புடன்
சி. பாலச்சந்திரன்
ஆசிரியர்
ஈழநாடு - பாரிஸ்